பெயர்
புதினா
அறிவியல் பெயர்
மென்தா ஸ்பைகேட்டா
(Mentha spicata)
பயன்கள்:
- இரத்தம் சுத்தமாகும்
- மலச்சிக்கல் நீங்கும்
- வயிற்று புழுக்களை நீக்கும்
- மஞ்சல் காமாலை, வாதம், வறட்டு இருமல் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது
- மாதவிலக்கு பிரச்சனை நீங்குகிறது
பெயர்
கேசவர்த்தினி
அறிவியல் பெயர் சென்ட்ராதேரம் பன்ச்சுவேட்டம்
(Centratherum Punctatum)
பயன்கள்:
- முடிவளர்வதற்கு பயன்படுகிறது
- முடி உதிர்வகை தடுக்கிறது
- தலை முடி ரோமத்திற்கு உறுதியளிக்கிறது
- இளநரை நீங்க பயன்படுகிறது
பெயர்
ரணகள்ளி
அறிவியல் பெயர் எபோர்பியா
பயன்கள்:
- சிறுநீரக கல்லை கரைக்க பயன்படுகிறது
- சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
- காது வலியை குணப்படுத்தும்
- முடி வளர்தல் மற்றும் இளநரை பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது
- பித்த வெடிப்பு குணமாகும்
பெயர்
வெற்றிலை
அறிவியல் பெயர்
பைப்பர் பெட்டில் (Piper Betle)
பயன்கள்:
- பல், ஈறு வலிகளுக்கு பயன்படுகிறது
- சுவாச கோளாறை குணப்படுத்தும்
- தொற்று நோய்களை குணப்படுத்தும்
- காது வலி குணமாகும்
- செரிமான பிரச்சனைகளை குணமாக்குகிறது
பெயர்
சித்தரத்தை
அறிவியல் பெயர்
அல்பினியா அப்பீசினாரம்
(Alpinia Officinarum)
பயன்கள்:
- ஆஸ்துமாவை குணபடுத்துகிறது
- இடுப்பு வலியை குணப்படுத்தும்
- மூட்டு வலி நீங்கி எலும்பு வலுப்பெறும்
- இருமல் குணமாகும்
- குழந்தைகளுக்கு மாந்தம் குணமாகும்
பெயர்
தூதுவளை
அறிவியல் பெயர்
சொலானம் டிரைபலோட்டம் (Solanum Trilobatum)
பயன்கள்:
- இருமல், இரைப்பு, சளி நீங்கும்
- வாத பித்த நோய்களை குணப்படுத்தும்
- எலும்பு வலுப்பெறும்
- இளைப்பு நீங்கி உடல் வலுப்பெறும்
- பாம்பின் விசத்தை முறிக்கும்
பெயர்
பிரண்டை
அறிவியல் பெயர்
சிஸ்சஸ் குவாடிராங்குலாரிஸ் (Cissus quadrangularis)
பயன்கள்:
- அடிப்பட்ட வீக்கம், சுளுக்கு நீங்கும்
- அஜீரண கோளாறுகளை குணப்படுத்தும்
- இரத்த ஓட்டம் சீராகும்
- இதய நோய்கள், இரத்த அழுத்தம் குணமாகும்
- எலும்பு முறிவிற்ககு சிறந்த மருந்தாகும்
பெயர்
முடக்கத்தான் கீரை
ஆறிவியல் பெயர்
கார்டியோஸ்பெர்மம் ஹாலிகேபம் (Cardiospermum Halicacabum)
பயன்கள்:
- வாத நோய்கள் குணமாகும்
- மலச்சிக்கல், கரப்பான் நோய்களை குணப்படுத்தும்
- தோல் நோய்கள் குணமாகும்
- மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும்
- கருப்பையில் உள்ள நச்சுகள் நீங்கும்
பெயர்
சிறியா நங்கை
அறிவியல் பெயர் ஆண்ட்ரோ கிராபிஸ் பானிகுலேட்டா
(Andrographis Paniculata)
பயன்கள்:
- வீக்கம் குணமாகும்
- நீரழிவு நோய்களை குணப்படுத்தும்
- தோல் நோய்கள் குணமாகும்
- தேமல் பிரச்சனைகள் குணமாகும்
- கல்லீரலில் உள்ள நச்சுகள் நீங்கும்
பெயர்
பெரியா நங்கை
அறிவியல் பெயர்
பாலிகாலா எலாங்கேட்டா
(Polygala Elongata)
பயன்கள்:
- தொழுநோய் குணமாகும்
- புற்று நோய்களை குணப்படுத்தும்
- மூச்சுகுழாய் அழற்சி குணமாகும்
பெயர்
சீனி துளசி
அறிவியல் பெயர்
ஸ்டீவியா ரெபாடியானா
(Stevia Rebaudiana)
பயன்கள்:
- இரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது
- இதய நோய்களை குணப்படுத்தும்
- செரிமான கோளாறுகளை சீராக்குகிறது
- தோல் நோய்களை நீக்கும்
பெயர்
விக்ஸ் துளசி
ஆறிவியல் பெயர்
ஆசிமம் டெனுபுளோரம் (Ocimum Tenuiflorum)
பயன்கள்:
- காய்ச்சலை குணப்படுத்துகிறது
- இருமலை குணப்படுத்தும்
- இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது
- தோல் நோய்களை குணப்படுத்துகிறது
- உடலுக்கான கிருமி நாசினியாக பயன்படுகிறது
பெயர்
பொடுதலை
அறிவியல் பெயர்
பைலா நோடிபுளோரா
(Phyla Nodiflora)
பயன்கள்:
- நீரழிவு நோயை குணப்படுத்துகிறது
- இருமலை குணப்படுத்தும்
- அக்கி புண் குணமாகும்
- பொடுகு நீங்கும்
- வெள்ளை படுதல் குணமாகும்
பெயர்
பூனை மீசை
ஆறிவியல் பெயர்
ஆர்த்தோ சிபான் (Orthosiphon)
பயன்கள்:
- சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது
- உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்தும்
- சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது
- கல்லீரல் நோய்க்கு மருந்தாகும்
பெயர்
கற்பூற துளசி
ஆறிவியல் பெயர்
ஆசிமம் கிளிமண்ட்ஸ்காரிகம்
(Ocimum Kilimandscharicum)
பயன்கள்:
- சளி தொடர்பான கோளாறுகளை
குணப்படுத்துகிறது - இருமலை குணப்படுத்தும்
- ஆல்சர் நோயை குணப்படுத்துகிறது
- டயரியா பிரச்சனைக்கு மருந்தாகும்
- மறதி நோய்க்கு மருந்தாகும்
பெயர்
ஆடாதொடை
ஆறிவியல் பெயர்
ஜஸ்டிசியா அதடோடா
(Justicia Adhatoda)
பயன்கள்
- சளி, இருமல் தொடர்பான கோளாறுகளை
குணப்படுத்துகிறது - நுரையீரல் நோயை குணப்படுத்தும்
- இரத்த அழுத்தம் குணமாகிறது
- ஆஸ்த்மா பிரச்சனைக்கு மருந்தாகும்
- காச நோய்க்கு மருந்தாகும்
பெயர்
கற்பூறவல்லி
அறிவியல் பெயர்
கோலியஸ் அரோமேடிகஸ்
(Coleus Aromaticus)
பயன்கள்:
- சளி, இருமல் தொடர்பான கோளாறுகளை
குணப்படுத்துகிறது - நாசி நெறிசல், தொண்டை புண் நோயை குணப்படுத்தும்
- வயிற்றின் செரிமானத்திற்கு பயன்படுகிறது
- ஆஸ்த்மா பிரச்சனைக்கு மருந்தாகும்
- மூச்சுகுழாய் அழற்சி சிகிச்சைக்கு மருந்தாகும்
பெயர்
இன்சுலின்
அறிவியல் பெயர் கேமாகோஸ்டஸ் கஸ்பிடடஸ்
(Chamaecostus Cuspidatus)
பயன்கள்:
- உடலின் சர்க்கரை அளவை சீராக்குகிறது
- இன்சுலின் சுரப்பு குறைப்பை தடுக்கிறது
- பருக்கள் மற்றும் முகத்தில் கரும்புள்ளி நீக்க பயன்படுகிறது
பெயர்
கரிசலாங்கன்னி
அறிவியல் பெயர் எகிலிப்டா புரோஸ்டிரேட்டா
(Eclipta Prostrata)
பயன்கள்:
- சளி; தொடர்பான கோளாறுகளை குணப்படுத்துகிறது
- காது வலி குணமாகிறது
- யானைக்கால் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது
- தேள் கடி நஞ்சை நீக்குகிறது
- மூல நோய் குணமாகிறது
பெயர்
பொன்னாங்கண்ணி கீரை
அறிவியல் பெயர் அல்டர்னான்ந்தேரா செசல்ஸ்
(Alternanthera Sessilis)
பயன்கள்:
- உடல் எடை குறைய உதவுகிறது
- மூல நோய் குணமாகிறது
- உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது
- மண்ணீரல் நோயை குணப்படுத்துகிறது

